
சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கரோனா வைரஸ் தொற்று பரவியது. அங்கிருந்து உலக நாடுகளுக்கு வைரஸ் பரவியது. வைரஸ் பரவுவதைத் தடுக்க சீனா தவறிவிட்டதாகவும், இதில் சீனா உண்மையை மறைக்கிறது. அதை நாங்கள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம் என்று தொடக்கம் முதலே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், சீனாவில் தொற்றுக்கு உயிரிழந்தோர் 5 ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது என்று அந்நாட்டு அரசு கூறியது. இதுகுறித்து ‘பாக்ஸ் நியூஸ்’ சேனலின் செய்தியாளர் லாரா இங்கரஹாமுக்கு ட்ரம்ப் அளித்த பேட்டியில் நேற்று கூறும்போது, ‘‘சீனாவில் கரோனா வைரஸுக்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உண்மையான எண்ணிக்கையை சீன அரசு மறைக்கிறது. உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பை விட, சீனாவில் அதிகம்’’ என்று தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments