
வாட்ஸன், டூப்பிளசிஸின் மிரட்டலான, ஆகச்சிறந்த பாட்னர்ஷிப்பால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 18-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை 10 விக்கெட்டில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமான வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது. 179 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் சேர்த்து 10 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments