பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 12,872 பேருக்குக் கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரிட்டனில் கரோனா பாதிப்பு 6 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் ஊடகங்கள் தரப்பில், “பிரிட்டனில் கரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 12,872 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,03,716 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை பிரிட்டனில் 42,825 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {