செங்கல்பட்டு: அறுவடை கூலி 3.500 ரூபாய் தராததால் ஆத்திரத்தில் டிராக்டரை மேலே ஏற்றி விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விவசாயியை கொன்ற கொலையாளி மறைமலைநகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அடுத்த கொண்டமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜகோபால் (வயது-49) என்பவர் விவசாயம் செய்து வந்தார்.

from Oneindia - thatsTamil