அஸ்வின், ரபாடா, ஸ்டாய்னிஷ் ஆகியோரின் கட்டுக்கோப்பான, துல்லியமான பந்துவீச்சு, விக்கெட் வீழ்த்தும் திறமை ஆகியவற்றால், ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 23-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் சேர்த்தது. 185 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.4 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்து 46 ரன்களில் தோல்வி அடைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்