ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் 13ஆம் சீசன் ஐபிஎல் டி20 தொடரில் தொடர்ந்து மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி, பேட்டிங்கில் சொதப்பியதால், இந்திய அணியில் இரு வீரர்கள் தங்களுக்குரிய இடத்தை இழந்துள்ளனர்.

இந்திய ஒருநாள் அணியிலும், டி20 அணியிலும் இடம் பெற்ற அந்த இரு வீரர்களும் ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. ஆனால், கரோனா தொற்றுக்கு முன்பு நடந்த நியூஸிலாந்து தொடர், மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடர், தென் ஆப்பிரிக்கத் தொடர் அனைத்திலும் அந்த இரு வீரர்களும் இடம் பெற்றிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்