
ஓர் உறையில் 2 வாள்கள் இருக்க முடியுமா, ஒரே கூண்டுக்குள் ஆக்ரோஷமான 2 சிங்கங்கள் இருக்க முடியுமா? ஆனால் குத்துச்சண்டை உலகில் ஒரே நேரத்தில் 2 ஆக்ரோஷமான வீரர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள்தான் மைக் டைசனும், இவாண்டர் ஹோலிபீல்டும்.
1984-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது இருவரும் நண்பர்களாகத்தான் இருந்தார்கள். இந்த ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவுக்காக பங்கேற்ற இருவரும், பதக்கங்களை வெல்லாவிட்டாலும் இக்காலகட்டத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்து ஊர் சுற்றியுள்ளனர். ஆனால் பின்னாளில் தொழில்முறை குத்துச்சண்டை வீரர்களாக மாறியதும் அவர்களிடையே தங்களில் யார் பெரிய வீரர் என்ற ஈகோ உருவானது. தொடர்ந்து தங்கள் எதிராளிகளை வீழ்த்தி வெற்றிகளைப் பெற்றுவந்த இருவரும், முதல் முறையாக 1996-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி நேருக்கு நேர் களம் கண்டனர். உலக குத்துச்சண்டை கூட்டமைப்பின் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் பட்டத்துக்காக இந்த குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதற்கு முன் ஏற்கெனவே மைக் டைசன் சாம்பியனாக இருந்தார். அந்நாளில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த குத்துச்சண்டை போட்டியில் இவாண்டர் ஹோலிபீல்ட் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments