ஆஸ்திரேலியாவில் உள்ள மின்னல் வேக ஆடுகளங்களைச் சமாளிக்கும் நோக்கில், இந்திய அணி வீரர் கே.எல். ராகுல் டென்னிஸ் பந்துகளை வீசச் செய்து புல் ஷாட் அடித்து இன்று பயிற்சியில் ஈடுபட்டார்.

கடந்த 2 மாதங்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் செத்துப்போன ஆடுகளங்களில் ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் விளையாடி வந்தார். ஆனால், இம்மாதம் 27-ம் தேதி முதல் மின்னல் வேக ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பவுன்ஸர்களையும், யார்க்கர்களையும் சந்திக்க வேண்டியது இருக்கும். அதற்குத் தயார்படுத்தும் வகையில் ராகுல் டென்னிஸ் பந்துகளை வீசி, புல் ஷாட் அடித்துப் பயிற்சி எடுத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்