ஜகார்டா: இந்தோனேசியாவில் 12 வயது சிறுவனை ராட்சத காற்றாடி ஒன்று வானில் தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைதளங்களில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அதில் சிறுவன் ஒருவனை ராட்சத காற்றாடி ஒன்று அலேக்காக தூக்கிக்கொண்டு வானில் பறக்கிறது. ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேலே சென்றதும், அந்த சிறுவன் காற்றாடி அறுந்து தொப்பேன கீழே விழுகிறான்.
from Oneindia - thatsTamil

0 Comments