இந்திய விளையாட்டுத் துறையின் சூப்பர் மேன் என்று எம்.ஜே.கோபாலனைச் சொல்லலாம். ஒரே நேரத்தில் இந்திய ஹாக்கி அணியிலும், இந்திய கிரிக்கெட் அணியிலும் இடம்பெற்ற பெருமை அவருடையது. இப்படி ஒரே நேரத்தில் 2 விளையாட்டுகளுக்கான அணியிலும் இடம்பெற்ற அவரது சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.

1909-ம் ஆண்டு தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மொரப்பாக்கத்தில் எம்.ஜே.கோபாலன் (மொரப்பாக்கம் ஜோஸ்யம் கோபாலன்) பிறந்தார். கோபாலனுக்கு சிறு வயதாக இருக்கும்போதே அவரது பெற்றோர், சென்னை திருவல்லிக்கேணிக்கு இடம்பெயர்ந்தனர். சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மற்றும் ஹாக்கி போட்டிகளில் கோபாலன் வல்லவராக இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்