புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் ரூர்கேலா இரும்பு ஆலையில் விஷவாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.மயங்கி விழுந்த மேலும் 6 தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், என் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் இந்த துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் உள்ளன என்று கூறியுள்ளார்.

from Oneindia - thatsTamil