ரியோ டி ஜெனிரோ: அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் நாட்டில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா தாக்கம் ஆரம்ப காலத்தில் அதிகமாக இருந்தபோது அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஊரடங்கு உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கையாளவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. கொரோனாவுக்கு எதிராக அதிபர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பிரேசிலில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர்.  

from Oneindia - thatsTamil