2007-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்றிலேயே இந்தியாவும் பாகிஸ்தானும் வெளியேறின. இந்திய ரசிகர்கள் இதனால் வருத்தப்பட்டாலும் வருந்தத்தக்க சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை. ஆனால் பாகிஸ்தானில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தன. அதில் குறிப்பிடத்தக்க விஷயம் அந்நாட்டு பயிற்சியாளர் பாப் உல்மரின் மரணம்.

ஒரு கிரிக்கெட் வீரராக பெரிய அளவில் சாதிக்காத பால் உல்மர், 1990-களில் தென் ஆப்பிரிக்க அணியைக் கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டார். 2005-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதில் முக்கிய பங்கு வகித்தார் பாப் உல்மர். இவரது பயிற்சியின்கீழ் பாகிஸ்தான் அணி, 2007-ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்கள் வெகுவாக நம்பினர். ஆனால் அதற்கு நேர்மாறாக பாகிஸ்தான் அணி முதல் சுற்றிலேயே வெளியேற, அவருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்