ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் நேற்று திடீரென்று ஏற்பட்ட வெள்ள பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 90 பேர் வரை பலியாகியுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேஷியாவை அடுத்தடுத்து புயல்கள் தாக்கியுள்ளன. இதனால் இந்தோனேஷியா முழுவதும் நேற்று கன மழை பெய்தது. இதன் காரணமாக அந்நாட்டில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், நிலச்சரிவும் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
from Oneindia - thatsTamil

0 Comments