சுக்மா: சத்தீஸ்கர் மோதலில் மாயமான சி.ஆர்.பி.எப். வீரர் ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ் தங்களிடம் பிணைக் கைதியாக இருப்பதாகவும் அவரை துன்புறுத்தாமல் விடுதலை செய்வோம் என்றும் மாவோயிஸ்டுகள் தரப்பில் இருந்து அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா-பிஜப்பூர் மாவட்ட எல்லைகளில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகளை தேடி பாதுகாப்பு படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர்.
from Oneindia - thatsTamil

0 Comments