பீஜிங்: அருணாச்சல பிரதேச எல்லைக்கு அருகில் சீனா 67 கிலோ மீட்டர் தூரம் உள்ள முக்கியமான நெடுஞ்சாலையை அமைத்து முடித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிடிஐ செய்தி ஏஜென்சி, இதுகுறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலை சீனாவால் உலகின் மிகப்பெரிய பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் யார்லங் ஜாங்போ கிராண்ட் கேன்யன் வழியாக கட்டப்பட்டுள்ளது, இந்த பள்ளத்தாக்கின் அதிகபட்ச ஆழம் 6009 மீட்டர்.
from Oneindia - thatsTamil

0 Comments