செஸ் போட்டியில் சிறந்தவர் யார் என்ற போட்டியில், காரி காஸ்பரோவை, ‘டீப் ப்ளூ’ என்ற கம்ப்யூட்டர் வென்ற நாள் மே 11, 1997.

புகழ்பெற்ற ஐபிஎம் நிறுவனத்தால் 1989-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சூப்பர் கம்ப்யூட்டர்தான் ‘டீப் ப்ளூ’. செஸ் கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவரான ஜோயல் பெஞ்சமின் என்பவரின் உதவியால் செஸ் விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் வகையில் இந்த கம்ப்யூட்டர் உருவாக்கப்பட்டது. செஸ் விளையாட்டு தொடர்பான சிப்களை ஏற்றிக்கொண்ட இந்த கம்ப்யூட்டருக்கும், அப்போதைய செஸ் சாம்பியனான காரி காஸ்பரோவுக்கும் இடையிலான முதலாவது செஸ் தொடர் 1996-ம் ஆண்டில் நடத்தப்பட்டது. இதில் காரி காஸ்பரோவ் வெற்றி பெற்றார். 6 போட்டிகளைக் கொண்ட இந்த செஸ் தொடரில் 4-2 என்ற புள்ளிக்கணக்கில் காரி காஸ்பரோவின் வெற்றி இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்