காரைக்கால்: தமிழகத்தின் எல்லையை ஒட்டியுள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசமான காரைக்காலில் இன்று மதுபான கடைகள் திறக்கப்பட்டது. அப்போது சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து கைத்தட்டி இளைஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். புதுச்சேரியில் கடந்த 45 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததன் காரணமாக இன்று முதல் அனைத்து கடைகளையும் திறக்க புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
from Oneindia - thatsTamil

0 Comments