
இலங்கை அணி உருவாக்கியிருந்த இரு பயோ-பபுள் சூழலையும் கடந்த வீரர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இப்போதுள்ள அணியைத் தவிர்த்து புதிய அணியை அறிவிக்க இலங்கை வாரியம் ஆலோசித்து வருகிறது.
ஏற்கெனவே இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர், டேட்டா அனலிஸ்ட் நிரோஷன் ஆகியோர் கரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட நிலையில் சந்துன் வீரக்கொடு என்ற வீரர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் டெல்டா வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிரிக் இன்போ தளம் தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments