காபூலில் இருந்து சுமார் முப்பது மைல்களுக்கு அப்பால் குறுகிய நுழைவு வாயிலைக் கொண்ட ஒரு பள்ளத்தாக்குப் பகுதியில் தாலிபனை எதிர்க்கும் ஆயுதக் குழுவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானின் கொந்தளிப்பான சமகால வரலாற்றில் பஞ்ஷிர் பள்ளத்தாக்குப் பகுதி இப்படிக் கவனிக்கப்படுவது முதன் முறையல்ல. 1980-களில் சோவியத் ஒன்றியத்துக்கும், 90களில் தாலிபன்களுக்கு எதிராகவும் வலிமையான எதிர்ப்பு அரணாக திகழ்ந்திருக்கிறது.

from Oneindia - thatsTamil