ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராவதன் மூலம் சர்வதேச அங்கீகாரம் பெற்றுவிடலாம் என்ற தாலிபான்கள் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. ஐ.நா. சபையில் ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளை சேர்த்துக் கொள்வதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தாலிபான்கள் சர்வதேசத்தின் ஆதரவைப் பெறுவதில் படு தீவிரமாக இருக்கின்றனர். அதேநேரத்தில் பெண்களுக்கான உரிமைகளை மறுப்பது, முன்னாள் ஆப்கானிஸ்தான் படை வீரர்களை படுகொலை செய்வது என்கிற தாலிபான்களின் நரவேட்டை தொடரவும் செய்கிறது.

from Oneindia - thatsTamil