பெங்களூரு: 2022 ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மார்கியூ எனப்படும் நட்சத்திர வீரர்கள் விற்பனை நிறைவு பெற்ற நிலையில் இரண்டாம் சுற்று ஏலம் தொடங்கியுள்ளது. இந்த இரண்டாம் சுற்றில் முதல் வீரராக மணிஷ் பாண்டே ரூ.4.60 கோடிக்கு புதிதாக உருவாகியுள்ள லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

முதல் சுற்று ஏலம்... சில சுவாரஸ்யங்கள்: முதல் சுற்றில் முதல் வீரராக ஷிகர் தவானின் பெயர் வாசிக்கப்பட்டது. ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. அடுத்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை ரூ.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. தொடர்ந்து, தென் ஆப்பிரிக்க மீடியம் பேசர் காகிசோ ரபாடாவை ரூ.9.25 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்