
மும்பை: தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக்.
நடப்பு சீசனில் சென்னை அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். அவரும் சென்னை விளையாடிய முதல் எட்டு போட்டிகளில் அணியை வழிநடத்தினார். அதில் இரண்டு போட்டிகளில் மட்டுமே சென்னை வெற்றி பெற்றிருந்தது. அண்மையில் கேப்டன் பொறுப்பை துறந்தார் ஜடேஜா. அதோடு மீண்டும் தோனி வசம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார். தோனி தலைமையில் நடப்பு தொடரில் களமிறங்கிய சென்னை அணி முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments