கொல்கத்தா: மதவெறுப்பை பரப்பும் நிகழ்ச்சிகளை வெளியிடும் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை உடனே நிறுத்துமாறு கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு மேற்கு வங்க அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் சாதி, மத ரீதியான மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு மத வெறுப்பு பேச்சுக்களே காரணமாக கூறப்படுகின்றன. தொலைக்காட்சிகள், யூடியூப் சேனல்கள், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் மத வெறுப்பு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
from Oneindia - thatsTamil

0 Comments