
மும்பை: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விராட் கோலி, பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 22-ம் தேதி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது. இரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதில், ரோஹித் சர்மா ,விராட் கோலி , பும்ரா , ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. 3 ஒருநாள் போட்டியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments