ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உதம்பூர் மாவட்டத்தில் ஆளில்லா பேருந்தில் திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும் இருவர் காயமடைந்துள்ளனர். இது குறித்து ராணுவம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. கடந்தை 8 மணி நேரத்தில் ஜம்மு காஷ்மீரில் இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவங்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

from Oneindia - thatsTamil