மும்பை: எதிர்வரும் 2023 ஐபிஎல் சீசனுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அந்த அணி நிர்வாகம் சமூக வலைதளங்களில் பகிர்ந்து உறுதி செய்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டுக்கு நடுவே உலகம் முழுவதும் நடைபெறும் லீக் கிரிக்கெட் தொடர்களும் கவனம் ஈர்த்து வருகின்றன. அதில் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. மொத்தம் 10 அணிகள் கடந்த சீசனில் பங்கேற்று விளையாடி இருந்தன. அடுத்த ஆண்டும் 10 அணிகள் விளையாட உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்