கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் ஏறி அதிமுக நிர்வாகி இருவர் குடிபோதையில் காலில் விழுந்து பேசவிடாமல் தடுத்து வம்புக்கு இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

from Oneindia - thatsTamil