அமராவதி: ஆந்திராவில் கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த 6 மாத பெண் சிசுவை கலைக்க முயன்ற போது சிசுவுடன் சேர்ந்து அந்தப் பெண்ணும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்களை அணுகாமல் வீட்டில் வைத்தே நாட்டு வைத்தியம் செய்ததில் அந்த கர்ப்பிணிப் பெண் துடிதுடித்து இறந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கொடூர சம்பவத்தை நிகழ்த்திய அவரது கணவரையும், மாமியாரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

from Oneindia - thatsTamil