காந்திநகர்: குஜராத் தேர்தல் பரப்புரையில் பிரதமர் ஈடுபட்டிருந்தபோது அனுமதியின்றி 'ட்ரோன்' ஒன்று பறந்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ட்ரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர் அதனை இயக்கியவர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பிரதமரின் பாதுகாப்பு குறைபாடாக பார்க்கப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

from Oneindia - thatsTamil