
அடிலெய்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக எளிதாக வெல்ல வேண்டிய போட்டியை கொஞ்சம் போராடி வென்றது நெதர்லாந்து கிரிக்கெட் அணி. சூப்பர் 12 சுற்று போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெதர்லாந்து வெற்றி பெற்றுள்ளது.
அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே, பேட்டிங்கை தேர்வு செய்தது. 19.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ரன்களை எடுத்திருந்தது ஜிம்பாப்வே. 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து விளையாடியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments