
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் இன்று காலை உத்தராகண்ட் மாநிலத்தில் காரில் பயணித்தபோது விபத்தில் சிக்கினார். தற்போது மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த விபத்தில் அவருக்கு ஏற்பட்ட காயம் குறித்த தகவலை பிசிசிஐ பகிர்ந்துள்ளது.
டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் பயணித்தபோது சாலையில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்து ரூர்கி அருகே நடந்தது. கார் தீப்பற்றிய நிலையில், அந்த வழியாக பயணித்தவர்கள் உடனடியாக அவரை காரில் இருந்து மீட்டுள்ளனர். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments