போபால்: நடிகர் ஷாரூக் கான் நடித்து இருக்கும் பதான் திரைப்படத்துக்கு பாஜக, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இஸ்லாமிய அமைப்புகளும் அந்த படத்திற்கு தடைகோரி இருக்கின்றன. பிரபல இந்தி நடிகர் ஷாரூக் கான் நடித்து இருக்கும் திரைப்படம் பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கி இருக்கும் இப்படத்தில் தீபிகா படுகோனே நாயகியாக நடித்து உள்ளார்.

from Oneindia - thatsTamil