லண்டன்: தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் இயன் மோர்கன். இவர் கடந்த 2019 உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

36 வயதான மோர்கன், அயர்லாந்து நாட்டில் பிறந்தவர். 2006 வாக்கில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அவர் முதன் முதலில் விளையாடிய சர்வதேச கிரிக்கெட் போட்டி அயர்லாந்து அணிக்காக தான். 2009 ஏப்ரல் வரை அயர்லாந்து அணிக்காக விளையாடி வந்தார். அதே ஆண்டின் மே மாதம் முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாட தொடங்கினார். அது முதல் கடந்த ஆண்டு வரையில் இங்கிலாந்து அணிக்காக அவர் விளையாடி இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்