காசியாபாத்: உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயமடைந்தனர். உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் மோடி நகரில் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இன்று மாலை திடீரென அங்கு ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் விரைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன..
from Oneindia - thatsTamil

0 Comments