
இயற்கையாகவே மஞ்சள் ஒரு கிருமி நாசினி என்பதை அனை வரும் அறிவர். இந்நிலையில் மஞ்சளில் உள்ள ஒரு பொருள் சில வைரஸ்களை அழிக்க உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக் கின்றனர்.
மஞ்சளில் குர்குமின் என்ற பொருள் காணப்படுகிறது. மஞ் சளின் நிறத்துக்கு காரணமான இந்த கலவை டிரான்ஸ்மிசிபிள் காஸ்ட்ரோஎன்டிரிடிஸ் வைரஸ் (டிஜிஇவி) என்ற பன்றிகளை தாக்கும் கரோனா வைரஸை அழிக்கும் திறமை கொண்டது என்று சீனாவில் இருந்து வெளி யாகும் ஜர்னல் ஆஃப் ஜெனரல் வைராலஜி இதழில் வெளியிட் டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த டிஜிஇவி வைரஸானது ஆல்பா கரோனா வைரஸ் வகையைச் சேர்ந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments