துபாயில் யாரோ விட்டு சென்ற பையை, போலீஸில் நேர்மையாக ஒப்படைத்தார் இந்தியர். அவருக்கு பொறுப்புள்ள குடிமகன் என்ற சான்று வழங்கி போலீஸார் பாராட்டி உள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த ரிதேஷ் ஜேம்ஸ் குப்தா என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் வசிக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அநாதையாக கிடந்த ஒரு பை அவர் கண்ணில் பட்டது. அதை எடுத்து பார்த்தபோது, அதில் 14 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மற்றும் 54,452 டாலர் மதிப்புள்ள தங்கம் ஆகியவை இருந்தன. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரிதேஷ், உடனடியாக அந்தப் பையை போலீஸில் ஒப்படைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {