ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 40 நாட்களே ஆன குழந்தையைத் தந்தையே கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தோல்ச பகுதியைச் சேர்ந்தவர் மனோ. 23 வயதாகும் இவர் திருநின்றவூரில் உள்ள பூக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் ஹம்சா நந்தினி(20). இவர்களுக்கு இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
from Oneindia - thatsTamil

0 Comments