
புது டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் அபார வளர்ச்சி கண்டுள்ள இந்த வேளையில் அதற்கான விதையைப் போட்டது தானே என தெரிவித்துள்ளார் முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி. ட்வீட் மூலம் இதனை தெரிவித்துள்ளார் அவர்.
2023 முதல் 2027 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சி, டிஜிட்டல், பிரத்யேக போட்டிகள் மற்றும் வெளிநாடுகளில் ஒளிபரப்பு செய்யும் உரிமத்திற்கான ஏலத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தியது. இதில் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூ.23,575 கோடிக்கும், டிஜிட்டல் உரிமத்தை வயாகாம் 18 நிறுவனம் ரூ.23,758 கோடிக்கும் பெற்றுள்ளன. இது தவிர வெளிநாட்டு ஒளிபரப்பு உரிமம் ரூ.1,057 கோடிக்கு பெறப்பட்டுள்ளது. ஒளிபரப்புக்கான ஒட்டுமொத்த விலை ரூ.48,390 கோடி. மலைக்க வைக்கும் இந்த விலையை குறித்து அறிந்தவர்கள் பலரும் தங்கள் கருத்துகளை சொல்லி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments