எதிர்வரும் ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆல் ரவுண்டர் ஜடேஜாவின் இருப்பு மிகவும் அவசியம் என அணி நிர்வாகத்திடம் தோனி சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் ஜடேஜா சென்னை அணியுடன் தனது பயணத்தை மீண்டும் தொடர வாய்ப்புகள் அதிகம் என நம்பப்படுகிறது.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஆட்டங்களில் ஜடேஜா தேவை என்றும், அவரது இடத்தில் மாற்று வீரரை நிரப்ப முடியாது என்றும் சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த சீசனில் அணி நிர்வாகம் மற்றும் ஜடேஜா தரப்பில் கருத்து முரண் ஏற்பட்டது. அந்த சீசனில் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். பின்னர் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதோடு சீசன் முடிவதற்குள் தொடரில் இருந்து விலகினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்