
பிரேசிலியா: கால்பந்தாட்ட அரசன் என போற்றப்படும் பிரேசில் அணியின் முன்னாள் வீரர் பீலே காலமானார். இந்தச் சூழலில் சக கால்பந்தாட்ட வீரரும், அர்ஜென்டினாவை சேர்ந்தவருமான மரடோனா மறைந்தபோது பீலே பகிர்ந்த ட்வீட் இப்போது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
பீலேவுக்கு கடந்த ஆண்டு பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், புற்றுநோய் பாதிப்பு இருந்த நிலையில் கடந்த 2021, செப்டம்பர் முதல் கீமோதெரபி சிகிச்சையும் எடுத்து வந்தார். ஆனால், அவரின் உடல் கீமோதெரபி சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. அதனால் சாவோ பாவ்லோ மாகாணத்தில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments