
மும்பை: முதல் சீசனுக்கான மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் இந்திய அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை 3.4 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ஏல நிகழ்வை தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய வீராங்கனைகள் நேரலையில் பார்த்து வருகின்றனர். தனக்கிருந்த டிமாண்டை பார்த்து ஸ்மிருதி உற்சாகத்தில் திகைத்துப் போயுள்ளார். அவருக்கு சக இந்திய அணி வீராங்கனைகள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
மும்பையில் நடைபெறும் இந்த ஏலத்தில் முதல் வீராங்கனையாக ஸ்மிருதி பெயர் அறிவிக்கப்பட்டது. அவரது அடிப்படை விலை ரூ.50 லட்சம். மும்பை அணி முதலாவது அணியாக ஏலத்தில் அவரை வாங்க விருப்பம் தெரிவித்தது. இருந்தபோதும் பெங்களூர் அணி நிர்வாகம் தொடர்ந்து ஏலம் கேட்டது. இரு தரப்பும் விடாமல் ஏலம் கேட்க, இறுதியில் பெங்களூரு அணி ஸ்மிருதியை வாங்கியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments